உயிரியல் பூங்காவில் கன்று ஈன்ற யானை

0 587

பெல்ஜியத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் யானை குட்டி ஈன்றுள்ள சம்பவம் அங்குள்ள ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெய்ரி டைஸா விலங்கியல் பூங்காவில் ஆசிய யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இதில் 16 வயதான பரினா என்ற பெண்யானை கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தனியாகப் பராமரிக்கப்பட்டு வந்த பரினா நேற்று முன்தினம் கன்று ஈன்றது. அப்போது அதன் உடனிருந்த யானைகள் கன்றினை ஆசையுடனும் பாசத்துடன் தொட்டுப் பார்த்துக் கொண்டன.

உலகம் முழுவதும் வனப்பகுதியில் வாழும் யானைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் நிலையில் விலங்கியல் பூங்காவில் வாழும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக விலங்கியல் பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments