3 யானைகளை தனியார் அமைப்புகளிடம் வழங்கியது ஏன்? காஞ்சி காமகோடி பீடம் விளக்கம் அளிக்க உத்தரவு

0 548

மூன்று யானைகளை தனியார் அமைப்புகளிடம் வழங்கியது ஏன்? என காஞ்சி காமகோடி பீடம் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான சந்தியா, ஜெயந்தி, இந்துமதி ஆகிய யானைகளை பவுண்டேஷன் இந்தியா, வனவிலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் மிரட்டிப் பெற்றதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

அந்த அமைப்புகள் விழுப்புரம் மாவட்டம் குறும்பரம் கிராமத்தில் சட்டவிரோத யானைகள் முகாமை நடத்துவதாகவும், யானைகளைக் காட்டி வெளிநாட்டு நிறுவனங்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் நன்கொடை பெறுவதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

யானைகள் எந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன? என காமகோடி பீடம் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும்10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments