சித்திரை விழாவையொட்டி தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டார் கள்ளழகர்

0 483

அழகர்கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கள்ளழகர் தங்க பல்லக்கில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் விடைபெற்று மதுரைக்கு புறப்பட்டு சென்றார். தொடர்ந்து பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி உள்பட பல மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளி அருள்பாலிப்பார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 19-ந்தேதி காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் தங்ககுதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவார். இதனிடையே ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் கள்ளழகருக்கு சாற்றுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments