செல்போனுக்காக சிறுவனை கொலை செய்த இளைஞன் கைது

0 348

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் செல்போன் தர மறுத்த சிறுவனை கொலை செய்து கிணற்றில் வீசிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஆம்பூரின் அழகாபுரி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கர் என்பவரின் மகன் கிஷோரை கடந்த 5-ஆம் தேதி முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக புகாரின் பேரில் போலீசார் தேடிவந்த போது வீட்டுக்கு அருகில் உள்ள கிணறு ஒன்றில் சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், சிறுவன் மாயமான அன்று ஒரு செல்போனை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அந்த செல்ஃபோன் சிக்னலை ஆய்வு செய்த போது, அது அதே பகுதியை சேர்ந்த அஜீத் என்பவரிடம் இருந்தது-  அஜீத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது செல்ஃபோனை நண்டு என்ற விக்னேஷ் தன்னிடம் விற்றதாக அஜீத் தெரிவித்தார்.

இதையடுத்து விக்னேஷிடம் போலீசார் உரியமுறையில் விசாரித்தனர். அப் போது செல்போன் மீது ஆசைப்பட்டு சிறுவனிடம் கேட்டதாகவும் சிறுவன் தர மறுத்ததால் அவனைக் கழுத்தை நெறித்துக் கொன்று கிணற்றுக்குள் வீசியதாகவும் விக்னேஷ் ஒப்புக் கொண்டான். இதனிடையே சிறுவன் கிஷோரைக் காணவில்லை என்று அவனது பெற்றோர் தேடிய போது அவர்களுடன் சேர்ந்து கொலை செய்த விக்னேஷ் தேடியதும், தேடுவதற்காக சிறுவனின் பெற்றோரிடம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments