ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் செயல்திட்டத்தில் முக்கிய மாற்றம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் செயல்திட்டத்தின் மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், அதில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் செயல்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு கடந்த டிசம்பர் மாதமே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற இருந்தது. செயல் திட்டத்தில் சில அம்சங்கள் குறித்து பிரிட்டன் எம்.பி.க்களுக்கு கடும் அதிருப்தி இருந்த நிலையில், வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தால் தோல்வியடைந்திருக்கும் என்பதால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரெக்சிட் செயல் திட்டத்தின் மீது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மீண்டும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. செயல்திட்டம் நிறைவேறுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்த சில அம்சங்கள் நீக்கப்பட்டிருப்பதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். முன்னதாக, அவர் ஃபிரான்ஸ் சென்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Jean-Claude Juncker உடன் பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Comments