ரபேல் ஆவணத்தை திருடியவர் திருப்பி கொண்டுவந்து வைத்து விட்டாரா? - ப.சிதம்பரம் கிண்டல்

0 878

ரபேல் ஆவணத்தை திருடியவர் திருப்பி கொண்டுவந்து வைத்து விட்டாரா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார்.

ரபேல் விமான கொள்முதல் குறித்த வழக்கில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், ரபேல் கொள்முதல் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன என்றார். வெள்ளிக்கிழமை அன்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், ஆவணங்கள் திருடு போகவில்லை, நகல் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிலையில்  ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில், புதன்கிழமை திருடப்பட்ட ஆவணம் வெள்ளிக்கிழமை நகல் எடுக்கப்பட்ட ஆவணமாக மாறியுள்ளது என்று கூறியுள்ளார். ஆவணங்களை முதல் நாள் திருடி சென்ற திருடன் மறுநாள் வியாழக்கிழமை திரும்ப ஒப்படைத்து இருக்க வேண்டும் என்று அவர் கிண்டலடித்து உள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments