ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்று செலுத்த அனில் அம்பானி திட்டம் என தகவல்

0 1164

எரிக்சன் நிறுவனத்திற்கு 4 வாரங்களில் தரவேண்டிய 450 கோடி ரூபாயை, தமது சகோதரர் முகேஷ் அம்பானி நிறுவனத்தின் மூலமும், ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்றும் செலுத்த அனில் அம்பானி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்புக் கருவிகள் வாங்கியதற்காக எரிக்சன் நிறுவனத்துக்கு 571 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைத்துள்ளது.

இதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 4 வாரங்களில் 450 கோடி ரூபாயை எரிக்சன் நிறுவனத்திற்கு தரத் தவறினால், 3 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அனில் அம்பானியை உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

ஏற்கெனவே 118 கோடி ரூபாயை உச்சநீதிமன்றப் பதிவாளரிடம் வைப்புத்தொகையாக அந்நிறுவனம் செலுத்தியுள்ளது. இதுபோக, சென்னை, கொல்கத்தாவில் உள்ள ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்று தொகையை செலுத்த அனில் அம்பானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தங்கள் நிறுவனத்திடம் இருந்து கையகப்படுத்திய தொலைத்தொடர்பு சார்ந்த சொத்துகளுக்கான தொகையை விரைந்து வழங்குமாறு முகேஷ் அம்பானி நிறுவனத்தையும் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் வலியுறுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments