வரும் நிதியாண்டில் 20,000 பசுமை வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிப்பு - துணை முதலமைச்சர் ஓபிஎஸ்

0 473

வரும் நிதியாண்டில் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் 2019-2020 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

வரும் நிதியாண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் 2 ஆயிரத்து 276 கோடி ரூபாய் பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போன்றே, வரும் ஆண்டிலும் முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ்20 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும். இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் ஊரக வளர்ச்சித் துறைக்கு 18 ஆயிரத்து 273 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments