வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின் முதல் காட்சியை நடிகர் சிம்பு தனது ரசிகர்களுடன் பார்த்தார்

0 745

சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின் முதல் காட்சியை நடிகர் சிம்பு தனது ரசிகர்களுடன் பார்த்தார். சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற திரைப்படம் இன்று வெளியானது.

சென்னையில் காலை 5 மணிக்கு படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. சென்னை ரோகிணி திரையரங்கில் காலை 5 மணிக்கு படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்ட போது நடிகர் சிம்பு , நடிகை மேகா ஆகாஷ் ஆகியோர் ரோகிணி ரசிகர்களுடன் முதல் காட்சியை பார்த்தனர். அப்போது திரையரங்கு முன் திரண்டிருந்த ரசிகர்கள் பேனர்கள் வைத்தும், பால் ஊற்றியும் பட்டாசு வெடித்தும் நடனம் ஆடியும், மலர் தூவியும் உற்சாகமாக கொண்டாடினர்.

தமது கட்அவுட்களுக்கு பால் ஊற்ற வேண்டாம் என்று ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments