நடுக்கடலில் சிம்புவுக்கு பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்

0 467

வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வெற்றியடைய வேண்டி, புதுச்சேரி மாநில சிம்பு ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்தனர்.

சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்திற்கு அதிகப்படியான பேனர்கள் வைக்குமாறு, ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு கூறியிருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரி மாநில சிம்பு தலைமை ரசிகர் மன்றம் சார்பில் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்தி, காந்தி சிலை பின்புறம் உள்ள நடுக்கடலில் பேனர் வைத்துள்ளனர். மேலும் அந்த பேனருக்கு பாலாபிஷேகமும் செய்தனர்.

ஏற்கெனவே, அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படத்திற்கும், அஜித் ரசிகர்கள் இதே இடத்தில் பேனர் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments