ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்

0 372

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்த்த உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரர் ரபேல் நடால், வெற்றி பெற்றார். மெல்போர்னில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த பிரான்சஸ் டியபோயியை (( frances tiafoe ))எதிர்கொண்டார். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

வரும் வியாழக் கழமை நடைபெற இருக்கும் அரையிறுதிப் போட்டியில் கீரேக்க நாட்டை சேர்ந்த இளம் வயது ஆட்டக்காரர் சிட்சிபாசுடன் (( tsitsipas)), ரபேல் நடால் பலப்பரீட்சை நடத்த இருக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஸ்பர்டியை வீழ்த்தி முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments