ஆஸ்திரேலிய டென்னிஸ் அரையிறுதி சுற்றுக்கு 20 வயது இளைஞர் கிரீஸ் வீரர் முன்னேற்றம்

0 272

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு 20 வயது இளைஞரான சிட்ஜிபஸ் முன்னேறினார்.

கிரீஸ் நாட்டின் இளம் வீரரான ஸ்டெபனோஸ் சிட்ஸிபஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடப்பும் சாம்பியனும், 2-வது நிலை வீரருமான நட்சத்திர வீரரான ரோஜர் பெடரரை வீழ்த்தினார்.

இதன் மூலம் காலிறுதி சுற்றில் நுழைந்த அவர், அந்த போட்டியில் 22-ம் நிலை வீரரான பாடிஸ்டா அகுட்டை எதிர்கொண்டார். முதல் செட்டை ஸ்டெபனோஸ் சிட்ஸிபஸ் 7-5 எனக்கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 6-4 என இழந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட சிட்ஸிபஸ் 3-வது செட்டை 6-4 என அசத்தலாக கைப்பற்றினார்.

4-வது செட்டில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் சிட்ஸிபஸ் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments