காங். உருவாக்கும் மெகா கூட்டணிக்கு எதிர்காலம் இல்லை - நிதிஷ் குமார்

0 618

காங்கிரஸ் தலைமையில் அமைக்கப்பட்டு வரும் மெகா கூட்டணிக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த நிதிஷ்குமார், வரும் மக்களவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகளின் மெகா கூட்டணி தோல்வியைத் தழுவும் என்றும் கூறினார்.

ரபேல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தி வருவது குறித்தும் பதிலடி கொடுத்த நிதிஷ்குமார், இப்பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்து விட்டது என்பதுடன், நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments