ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி YSR காங்கிரஸ் கட்சி MP'கள் ராஜினாமா செய்ய முடிவு

0 308

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பிக்கள் 9 பேர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அரசு, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அறிவிப்பை வெளியிடத் தவறினால் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்த மறுநாள் தங்கள் கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் 9 பேரும் ராஜினாமா கடிதத்தை ஒப்படைப்பார்கள் என்று அக்கட்சி எம்பி ராஜ்மோகன் தெரிவித்தார்.

தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என  ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்  வலியுறுத்தியுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.  ஏற்கெனவே இரு கட்சிகளும் மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் வழங்கியுள்ளன.

திங்கட்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments