பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் உண்ணாவிரதம்

0 333

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடனடி நடவடிக்கை எடுக்க கோரி நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை சேப்பாக்கத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தொடக்கி வைத்தார்.

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியதை தொடர்ந்து, தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் அவர்களை விடுவித்திருக்க வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் வலியுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments