ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணைகளை வாங்குவது தொடர்பான இந்தியாவின் முடிவு, தெற்கு ஆசியாவில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கை - பாகிஸ்தான்

0 668

ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணைகளை வாங்குவது தொடர்பான இந்தியாவின் முடிவு, தெற்கு ஆசியாவில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கை என பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

ரஷியாவின் எஸ்-400 ஏவுகணைகள், 400 கிலோ மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும். இவற்றை வாங்குவது தொடர்பாக, இந்தியா-ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், எஸ்-400 ஏவுகணைகள் வாங்கும் இந்தியாவின் முடிவு மீண்டும் ஆயுதப் போட்டியை உருவாக்கும் என கூறியுள்ளது. 1998ஆம் ஆண்டு இருநாடுகளும் நடத்திய அணுகுண்டு சோதனையால் ஏற்பட்ட பதற்றம் ஓய்ந்த நிலையில், தற்போது எஸ்-400 ஏவுகணைகள் வாங்குவதும் பதற்றத்தை அதிகரிக்கும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments