Jio -வின் அதிரடி சலுகையால் ஆட்டம் கண்ட Airtel, Idea பங்கு மதிப்பு

0 233

ஜியோ நிறுவனத்தின் அதிரடி சலுகை அறிவிப்பால், மும்பை பங்குச் சந்தையில், ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலர் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு வீழ்ச்சியடைந்தன.

புத்தாண்டு தினத்தை தொடர்ந்து, குடியரசு தின சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம் ஒன்றரை ஜி.பி. டேட்டா வழங்கப்படும் திட்டங்களுக்கு 2 ஜி.பி. டேட்டாவும், ஒரு ஜி.பி.டேட்டா வழங்கப்படும் திட்டங்களுக்கு ஒன்றரை ஜி.பி. டேட்டாவும் வழங்கப்படும் என தெரிவித்தது.

ஜியோ நிறுவனத்தின் அதிரடி விலை குறைப்பு மற்றும் டேட்டா சலுகையால், மும்பை பங்குச் சந்தையில் ஏர்டெல், ஐடியா செல்லுலர் நிறுவனங்களின் பங்கு மதிப்பு 5 சதவீதம் வரை சரிவடைந்தது. இதை சரிகட்ட புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்து இரு நிறுவனங்களும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments