அமெரிக்காவின் பொருளாதாரத் தடை பற்றி இந்தியா கவலைப்படவில்லை: தர்மேந்திர பிரதான்

0 457

அமெரிக்கா பொருளாதாரத் தடைகளில் இருந்து விலக்கு அளிக்குமா என்பதைப் பற்றி கவலைப்படாமல், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. ஆனால், வரும் நவம்பரிலும் ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய உள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் எரிசக்தித்துறை கருத்தரங்கு ஒன்றில் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஈரானில் இருந்து எண்ணெய் வாங்குவதால், பொருளாதாரத் தடைகளில் இருந்து அமெரிக்காவிடமிருந்து விலக்கு பெற முடியுமா? இல்லையா? என்பது தெரியாது என்றார். இந்த நடவடிக்கை இந்தியாவின் வலிமையும், புதிய தலைமையையும் காட்டுவதாகவும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments