டெல்லியில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயலுடன் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சந்திப்பு

0 469

டெல்லியில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சந்தித்து, தமிழகத்திற்கு தேவையான அளவு நிலக்கரி வழங்குமாறு மனு அளித்தார்.

தமிழகத்தில் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்யுமாறு, பிரதமர் மோடிக்கு கடந்த வாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். இதையடுத்து, டெல்லி சென்ற மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, எரிசக்தித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்திற்கு நாள்தோறும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் மின்வெட்டுக்கான வாய்ப்பில்லை என்றும், எதிர்க்கட்சிகள் பொய்யான பிரச்சாரம் மேற்கொள்வதாகவும் குற்றஞ்சாட்டினார். ஒடிசாவில் கடந்த வாரத்தில் பெய்த கனமழையால், நிலக்கரி கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டதாகக் கூறிய அவர், அடுத்த 3 நாட்களில் தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை அனுப்ப மத்திய அரசு உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

இதை தொடர்ந்து மத்திய மின் துறை இணை அமைச்சர் ஆர்.கே.சிங்கை, தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி சந்தித்து மனுவை வழங்கினார். அப்போது அரசு மூத்த அதிகாரிகளும் உடனிருந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments