உணவு தேடி காட்டைவிட்டு வயல்களுக்கு வந்த 55 யானைகள்

0 261

மேற்கு வங்க மாநிலம் மிட்னாப்பூர் வனப்பகுதியில் இருந்து 55 யானைகள் கொண்ட காட்டு யானைக் கூட்டம் ஒன்று அப்பகுதியில் உள்ள வயல்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகளும் வனத்துறையினரும் கடும் சோதனைக்கு ஆளாகியுள்ளனர்.

உணவு கிடைக்காமல் வெறியுடன் திரியும் இந்த யானைக்கூட்டம் கண்ணில் பட்டதையெல்லாம் துவம்சம் செய்து அழித்துவிடுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கிராம மக்களை யானைகளிடமிருந்து பாதுகாக்க இரவும் பகலுமாக காவல் போடப்பட்டுள்ளது. துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டும், பட்டாசுகளைக் கொளுத்தியும் யானைகளை விரட்டுவதற்கு வனத்துறையினர் முயன்று வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments