எச்சரிக்கையை மீறிய செல்ஃபி மோகத்தால் நடந்த விபரீதம்

0 445

கிருஷ்ணகிரி மாவாட்டம் ஒசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணையில் செல்பி எடுக்க முயன்றபோது தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்த நிலையில், அவரை காப்பாற்ற சென்ற கல்லூரி மாணவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையை பார்வையிடுவதற்காக  திருப்பத்தூரை சேர்ந்த தேவேந்திரன்  தனது நண்பர்களுடன் வந்துள்ளார். பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்த்த பின் அணையின் மேல்பகுதிக்குச் சென்ற தேவேந்திரன், அங்கிருந்து செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாரதவிதமாக கால் தவறி அணையில் விழுந்த தேவந்திரன் தண்ணீரில் தத்தளித்தவாறு,  உயிருக்கு போராடினார். இதனைக் கண்ட கல்லூரி மாணவரான கேசவன், தேவேந்திரனைக் காப்பாற்ற அணையில் குதித்துள்ளார்.

இதில் நீரில் மூழ்கிய இருவரும் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தனர்.இதுகுறித்து அருகிலிருந்தோர் தீயணைப்புத்துறையினருக்கு  தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர்  நீண்ட நேரம் போராடி, இருவரது உடல்களையும் மீட்டனர். உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments