பொள்ளாச்சி அருகே கேரளாவில் மூலத்தரா தடுப்பணையில் பக்கவாட்டுச்சுவர் உடைந்தது

0 427

பொள்ளாச்சி அருகே கேரள பகுதியில், மூலத்தரா தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு, ஏராளமான விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

கனமழை காரணமாக ஆழியார் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை நெருங்கியுள்ளது. பாதுகாப்பு கருதி கேரள பகுதிக்கு செல்லும் கால்வாயில் இரண்டாயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் மனக்கடவு என்ற பகுதியின் வழியாக மூலத்தரா தடுப்பணையைக் கடந்து செல்கிறது.

தண்ணீர் அதிக அளவில் செல்வதால், மூலத்தரா தடுப்பணையின் பக்கவாட்டு சுவரில் உடைப்பு ஏற்பட்டது. அதன் வழியே வீணாக வெளியேறி வரும் தண்ணீர், கரையோரம் உள்ள தென்னந்தோப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. நெடும்பாறை, மீனாட்சிபுரம், கோபாலபுரம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தரைப்பாலமும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. எனவே, தடுப்பணையின் பக்கவாட்டுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments