பொள்ளாச்சி அருகே ஆய்வில் பிடிபட்ட 64,777 லிட்டர் போலி எண்ணெய்

0 168

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், சுமார் 65 ஆயிரம் லிட்டர் கலப்பட சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டன.

image

மூட்டம்பாளையத்தில் உள்ள வணக்கம் ஆயில் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் கலப்பட எண்ணை தயாராவதாக கிடைத்த தகவலின்பேரில், சனிக்கிழமையன்று அவர்கள் சோதனை நடத்தினர். கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஆல்பிரிட் என்பவருக்குச் சொந்தமான அந்த குடோனில், பாமாயில் போன்றவற்றை சமையல் எண்ணெயுடன் கலப்படம் செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பேரில், 64 ஆயிரம் 777 லிட்டர் ஆயிலை பறிமுதல் செய்த அதிகாரிகள், குடோனுக்கு சீல் வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments