காங்கிரஸ் எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிடம் வருத்தம் தெரிவித்தார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

0 179

நெடுஞ்சாலைத் திட்டத் தொடக்கவிழாவில் தனது பெயர் விடுபட்டதாகக் கூறிய காங்கிரஸ் எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிடம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வருத்தம் தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் பேசிய மத்தியப் பிரதேச மாநிலம் குணா மக்களவைத் தொகுதி எம்.பி.யான ஜோதிர் ஆதித்ய சிந்தியா தனது தொகுதியில் நடைபெற்ற நெடுஞ்சாலைத் திட்டத் தொடக்கவிழாவுக்கு மாநில அரசு தனக்கு அழைப்பு அனுப்பவில்லை என்றார்.

அழைப்பிதழிலும், அடிக்கல்லிலும் தனது பெயர் இடம் பெறவில்லை என்றும் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் நிதின் கட்கரி அது தவறுதான் என ஒப்புக்கொண்டார். அனைவரின் தவறுக்கும் தான் பொறுப்பேற்றுக்கொள்வதாகத் தெரிவித்த அவர், இனி அதுபோல் நேராது என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments