புதிய கின்னஸ் சாதனைகளின் ஆண்டுத் தொகுப்பு வெளியீடு

0 652

புதிய கின்னஸ் சாதனைகளின் ஆண்டுத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. மிகப்பெரிய மின்சார டூத் பிரஷ், விதவிதமான வடிவங்களில் உருவாக்கப்பட்ட வாகனங்கள் என பல்வேறு வகையான கின்னஸ் சாதனைகள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன.

2025-ஆம் ஆண்டின் தொகுப்பில், உலகம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்து 115 சாதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 80 சதவீதத்துக்கு மேல் புதிய சாதனைகள் என கின்னஸ் சாதனை பதிவு மையம் தெரிவித்துள்ளது.

சக்கர இருக்கையில் உட்கார்ந்தபடி புல்-அப்ஸ் எடுக்கும் நபர், காலுறைகளை காயப்போடும் நாய், மிகப்பெரிய பாதம் மற்றும் கைகளைக் கொண்ட டீன்-ஏஜ் நபர் என ஏராளமான கின்னஸ் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments