லியோவை முந்தியதா G.O.A.T..?..இந்தியாவில் மட்டும் ரூ 43 கோடி.. ரூ 126 கோடியை எட்டியது வசூல் - அஜித் ரசிகர்கள் கொண்டாட என்ன காரணம்?

0 1334

ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள விஜய்யின் கோட் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 126 கோடியை வசூலித்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியாகி உள்ள தி கோட் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் படத்தை பார்க்காமலேயே விமர்சிக்கும் ஹேட்டர்ஸ்களையும் திருப்தி படுத்தும் விதமாக இயக்குனர் வெங்கட் பிரபு சாமர்த்தியமாகவும் ஜனரஞ்சகமாகவும் காட்சிகளை வைத்திருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தி கோட் திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் பாக்ஸ் ஆபீசில் 43 கோடி ரூபாயை அள்ளியதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் ஒரே நாளில் 126. 32 கோடி ரூபாயை அள்ளியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் இந்த படத்திற்கு முன்பதிவு அதிகரித்து இருப்பதால் ரசிகர்களின் வருகை இருமடங்காக அதிகரிக்கும் என்று திரையரங்க உரிமையாளரகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தி கோட் படத்தில் AI மூலம் விஜயகாந்துக்கு நல்ல கவுரவத்தை அளித்திருப்பதாக கூறப்படும் நிலையில், ரஜினி, அஜீத் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் மகிழ்ச்சி அடையும்படியாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், கிளைமேக்ஸ் காட்சியில் அஜீத் ரசிகர்கள் திரையரங்கில் கத்தி கூச்சலிட்டு கொண்டாடிவருவதாகவும் கூறப்படுகின்றது.

அடையாறில் உள்ள திரையரங்கு ஒன்றில் விஜய் தனது மனைவி குழந்தைகள் , தாய் ஷோபா, தந்தை சந்திரசேகர் , படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபுவுடன் தி கோட் திரைப்படத்தை பார்த்து பாராட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பலதரப்பினரையும் கவர்ந்த தி கோட் திரைப்படம், லியோ படத்தின் முதல் நாள் வசூலான148 கோடி ரூபாயை எட்டிப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments