டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சந்திப்பு

0 915

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்த தமிழக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர், தமிழகத்திற்கு தேவையான கூடுதல் நிதி மற்றும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள துணை சபாநாயகர் தம்பிரை அலுவலகத்தில் ரயில்வே, நிதி, எரிசக்தி துறையை கவனித்து வரும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சந்தித்தனர். அப்போது, தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி எடுத்துச் செல்ல கூடுதல் ரயில் பெட்டிகளை ஒதுக்க வேண்டும் என பியூஸ் கோயலிடம் அமைச்சர் தங்கமணி வலியுறுத்தினார். 

அதேபோல், உள்ளாட்சித் திட்டங்களை நிறைவேற்ற 2017-18ஆம் ஆண்டுக்கு 3 ஆயிரத்து 340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். எனவே, 2018-19ஆம் நிதியாண்டில் நகராட்சி நிர்வாகத்துக்கு ஆயிரத்து 877 கோடி ரூபாயும், ஊரக வளர்ச்சித்துறைக்கு ஆயிரத்து 975 கோடி ரூபாயும் என மொத்தம் 3 ஆயிரத்து 852 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பியூஸ் கோயல் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை உடனிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments