வரதராஜப் பெருமாள் கோவிலில் கோடை உற்சவ ஊஞ்சல் சேவை

0 715

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் ஆனி மாத கோடை உற்சவம் ஊஞ்சல் சேவையுடன் நிறைவடைந்தது. மலர் அலங்காரத்தில் காட்சியளித்த வரதராஜப் பெருமாளை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

 

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே தளி கிராமத்தில் உள்ள காளியம்மன் - பகவதியம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரியுடன் பெண்கள் ஊர்வலமாக வந்தனர். ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு, தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத கங்காதேஸ்வரர் ஆலயத்தில், உன்மத்த பைரவருக்கும் மகா வாராகி அம்மனுக்கும் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சென்னை, எண்ணூர் தாழங்குப்பம் கிராமத்தில் உள்ள திருநாகலிங்கேஸ்வரர் கோவிலில் வாராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்தி பூஜை நடைபெற்றது. மீனவப் பெண்கள், தங்கள் வீடுகளில் செய்த பலகாரங்களை 108 சீர்வரிசை தட்டுகளில் கொண்டு வந்து அம்மனுக்குப் படையலிட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments