மதுரையில் வயதான பெண்கள் அடுத்தடுத்து கொலை.. நகைக்காக கொலை நடக்கிறதா என பொதுமக்கள் அச்சம்

0 235

மதுரையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வயதான பெண்கள் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் மாட்டுத்தாவணியில் உள்ள மீனாட்சி மிஷன்மருத்துவமனை வளாகத்தில், துப்புரவு பணியாளராக இருந்த முத்துலட்சுமி என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையின் 6ஆவது தளத்தில் கிடந்த சடலத்தில் அவர் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி போன்றவை காணாமல் போய் இருந்ததால், நகைக்காக கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் வயதான பெண்களை குறி வைத்து நடக்கும் கொலை, கொள்ளைகளை தடுக்க காவல்துறை பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments