சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது அரசுப் பேருந்து மோதும் சிசிடிவி காட்சி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது அரசுப் பேருந்து இடது பக்கவாட்டில் மோதும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
புதியம்புத்தூர் சிவன்கோயில் பகுதியில் வசிக்கும் மாடத்தி என்பவர் கடைக்கு சென்று திரும்பும்போது பின்னால் வந்த பேருந்து மோதியதில் கீழே விழுந்தார்.
பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் மாடத்திக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டதாகவும், பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் புதியம்புத்தூர் போலீசார் தெரிவித்தனர்.
Comments