இந்து மதம், இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தேவாலய பாதிரியார் மீது போலீசில் புகார்

0 426

இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ இமானுவேல் தேவாலய பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடந்த மாதம் 16ஆம் தேதி தேவாலயத்தில் நடந்த ஆராதனை நிகழ்ச்சியில் பிரின்ஸ் கால்வின் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில், இந்து முன்னணி சார்பாக ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இரு மதத்தினரிடையே பகையை ஊக்குவிக்கும் வகையில் பேசுதல், பிற மதத்தினரின் நம்பிக்கையை அவமதித்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments