அந்த 4 மணி நேர திக் திக்..! அறையில் அடைக்கப்பட்ட அர்பன் கம்பெனி பியூட்டீசியன்..! பாதுகாப்பு இல்லை என வேதனை
அர்பன் கம்பெனி என்ற ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை நிறுவனம் மூலம் வீடுதேடி பியூட்டிசியன் பணிக்கு சென்ற அழகு கலை நிபுணரை 4 மணி நேரம் அறையில் அடைத்து வைத்த சம்பவம் சென்னை தியாகராய நகரில் நிகழ்ந்துள்ளது.
வீடுதேடி அழகு கலை சேவை வழங்கச்சென்ற அர்பன் கம்பெனி அழகு கலை நிபுணர் அடைத்து வைக்கப்பட்டதை விவரிக்கும் காட்சிகள் தான் இவை..!
சென்னை கிண்டியில் செயல்படும் அர்பன் கம்பெனி என்ற ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை நிறுவனத்தில் தி.நகரை சேர்ந்த 35வயது பெண் ஒருவர், கடந்த 10ஆண்டுகளாக பியூட்டிசியனாக பணியாற்றி வருகின்றார். விஜயதசமி அன்று நண்பகல் வேளையில், தி நகர் பார்த்தசாரதி புரம் பகுதியில் வந்த அழைப்பை ஏற்று ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு இரண்டே கால் மணி நேரமாக அப்பெண்ணுக்கு மேக்கப் உள்ளிட்ட அழகு கலை பணிகளை மேற்கொண்ட பின்னர் அந்த பணிக்கான கட்டணமாக 1175 ரூபாயை வாடிக்கையாளரிடம் கேட்டுள்ளார். அதனை கொடுக்க மறுத்த பெண், தனது கணவருடன் சேர்ந்து , பியூட்டிசியனை ஆபாசமாக பேசியதோடு, வீட்டிற்குள் வைத்து பூட்டியதாகவும் கூறப்படுகின்றது
சுமார் 4 மணி நேரம் அங்கு அடைத்து வைக்கப்பட்ட நிலையில் , காவல்துறை அவசர உதவி எண்ணான 100க்கு தகவல் தெரிவித்ததால், விரைந்து வந்த மாம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்டதாகவும், அவர்கள் ஆன்லைனில் பணம் செலுத்துவதாக கூறியதால் சமரசம் பேசி போலீசார் தன்னை அனுப்பி வைத்ததாக பியூட்டிசியன் தெரிவித்தார்
தன்னை தாக்குவதாக நிறுவனத்திடம் புகார் அளித்த போது அதை பற்றி கண்டுகொள்ளவில்லை எனவும் ஒரு ஆர்டரை எடுத்தால் 200 ரூபாய் மட்டுமே தங்களுக்கு கிடைப்பதாகவும் தங்களௌடைய பாதுகாப்பை அர்பன் கம்பெனி நிறுவனம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இது குறித்து அர்பன் கம்பெனி தரப்பில் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.
Comments