அதிமுக - பாஜக கூட்டணி முறிவில் திமுக அச்சத்தில் இருக்கிறது - ஜெயக்குமார்

அதிமுக - பாஜக கூட்டணி முறிவில் திமுக அச்சத்தில் இருப்பதாக முன்னாள் அமைச்சரும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னையில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்றும் தெரிவித்தார்.
காவிரி உரிமையை அன்றிலிருந்து இன்றுவரை பாதுகாப்பது அதிமுக தான், அதை தாரைவார்த்து கொடுத்தது திமுக என விமர்சித்த ஜெயக்குமார் திருமதி சோனியாகாந்தி சென்னை வந்த போது காவிரி விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் நிர்பந்தம் செய்திருக்கலாமே என கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண் உரிமை பற்றி பேசும் திமுக, உங்கள் கட்சி தலைவராக கனிமொழியை நியமனம் செய்யுங்களேன் என கேள்வி எழுப்பியுள்ளார். 33 சதவீதம் இட ஒதுக்கீடு மத்தியில் கொண்டு வந்த போது அதற்கு முதல் கையெழுத்து போட்டது அதிமுக அரசு தான் எனவும் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்கள் போட்டியிட கையெழுத்து போட்டது அதிமுக அரசுதான் என கூறினார். 17 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை ஏன் கொண்டு வரவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
Comments