அய்யோ.. அம்மா.. வலிக்குது வீடுபுகுந்த கொள்ளையனை ஊர் கூடி உரித்த சம்பவம்..! டுவிஸ்ட் வைத்த போலீஸ்

0 2536

வீடு புகுந்து திருடி விட்டு தப்பி ஓடிய கொள்ளையர்களை தைரியமாக விரட்டிச்சென்று கட்டுமான தொழிலாளர்கள் உதவியுடன் பெண் ஒருவர் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து நகைகளை மீட்ட சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடு புகுந்து நகைகளை திருடிக்கொண்டு ஓடியவனை மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அடி தாங்காமல் கொள்ளையன் கதறும் காட்சிகள் தான் இவை..!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து-நான்கு ரோடு செல்லும் சாலை பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் இவர் வேலைக்கு சென்றிருந்த நிலையில், மனைவி நிவேதா வீட்டை பூட்டி விட்டு, பள்ளிக்குச் சென்ற குழந்தையை அழைத்து வர சென்றிருந்தார்.

திரும்பி வந்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததோடு, வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து இரண்டு இளைஞர்கள் ஒரு கருப்பு நிற ஷோல்டர் பேக்குடன் தப்பி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிவேதா திருடன், திருடன் என கூச்சலிட்ட வாரே அவர்களை தைரியமாக விரட்டிச்சென்றார்

பெண் ஒருவர் கூச்சலிடும் சத்தம் கேட்டு, அப்பகுதியில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தப்பி ஓடிய இளைஞர்களை துரத்தி பிடித்தனர், அவர்கள் கையில் வைத்திருந்த கருப்பு நிற ஷோல்டர் பேக்கையும் கைப்பற்றி நிவேதாவிடம் ஒப்படைத்தனர். சத்தம் கேட்டு திரண்ட அப்பகுதி பொது மக்கள் இரு கொள்ளயர்களுக்கும் தர்ம அடி கொடுத்தனர்

ஊர் கூடி உரித்து எடுத்ததால், எழுந்திருக்க முடியாமல் படுத்துக்கிடந்த இருவரையும் போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர்

போலீஸ் வாகனத்தில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறிய படி இருந்த ஒரு கொள்ளையனுக்கு இரண்டாவது ரவுண்டு அடிவிழுந்ததால் அலற தொடங்கினான்

பொதுமக்களிடம் இருந்து மீட்கப்பட்ட இரண்டு கொள்ளையர்களையும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீசார் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தப்பி ஓடிய திருடர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பேக்கில் இருந்து ஏராளமான தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றுடன் ஒரு சிறு பையில் நெக்லஸ் ஒன்றும் இருந்தது. அதனை மட்டும் கைப்பற்றிய போலீசார் விசாரணைக்கு பின் தருவதாக கூறி வாங்கிச்சென்றனர்.

பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்ற இளைஞர்கள் இருவர் பொதுமக்களிடம் பிடிபட்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments