காதலிக்கும் போது ஜாலி திருமணமுன்னா காலியா..? போலீசில் சிக்கி கட்டுனான் தாலி..! ஆதலால் காதலி.. காதலி.. காதலி..!

0 3106

6 வருடம் காதலித்த இளம் பெண்ணை 6 மாத கர்ப்பமாக்கிவிட்டு கழட்டி விட்ட காதலனை பிடித்த போலீசார், அவரிடம் கைது மந்திரம் ஓதியதால், ஜெயிலுக்கு பயந்து கோவிலில் வைத்து காதலியின் கழுத்தில் தாலி கட்டிய சம்பவம் விருத்தாசலம் அருகே அரங்கேறி உள்ளது.

எள்ளும் கொள்ளும் எரியுற மாதிரி முகத்துடன் கடு கடுவென காணப்படும் இவர் தான் காதலியை 6 மாத கர்ப்பிணியாக்கி விட்டு டாடா காண்பித்த புது மாப்பிள்ளை நிதிஷ்குமார்..!

விருத்தாசலம் அடுத்த பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் பி.ஏ.பட்டதாரியான நிதீஷ்குமார். இவரும் மங்கலம்பேட்டையில் உள்ள கடை ஒன்றில் வேலைபார்த்து வந்த நாகலெட்சுமி என்ற பெண்ணும் 6 வருடமாக காதலித்து வந்துள்ளனர். எல்லை மீறிய காதலால் நாகலட்சுமி 6 மாதம் கர்ப்பிணியானதால் அவரை நிதீஷ்குமார் கைவிட்டு சென்றதாக கூறப்படுகின்றது

தனது வாழ்க்கைக்கு நியாயம் கேட்டு நிதிஷ்குமார் வீட்டுக்கு சென்றும் பலனில்லததால், விருத்தசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் நாகலெட்சுமி. இதையடுத்து எஸ்கேப் காதலன் நிதிஷ்குமாரை பிடித்து, நாக லெட்சுமியை பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அடுத்த நிமிடம் காதலியை திருமணம் செய்து கொள்ள சம்மதித்ததால் இரு வீட்டாரும் கலந்து பேசினர். நிதீஷ்குமாருக்கு வேட்டி சட்டையும் , பெண்ணுக்கு கூரைபுடவையும் வாங்கிக் கொடுக்கப்பட்டது

மாப்பிள்ளை முறுக்கில் நின்ற நிதீஷ்குமார், கவலை தோய்ந்த முகத்துடன் நின்ற நாகலெட்சுமிக்கு வண்ணமுத்து மாரியம்மன் கோவிலில் வைத்து தாலிகட்டினர்

மாலைமாற்றி திருமணம் செய்து கொண்டாலும், ஊரே சேர்ந்து நம்மை சிக்கவைத்து விட்டார்களே என்ற கடுப்பு மணமகனின் முகத்தில் தெரிந்தது

நாகலெட்சுமியின் வாழ்க்கைக்கு முழு பொறுப்பு ஏற்று காவல் நிலையத்தில் எழுதிக்கொடுத்த நிதிஷ்குமார், திருமணம் முடிந்த சில நிமிடங்களுக்கெல்லாம் மாலையை கழற்றிக் கொண்டு கடுப்புடன் விலகிச்சென்றார்

போலீஸ் வழக்கில் இருந்து தப்பிக்க காதலியை மணந்தாலும் காலமெல்லாம் தாலி கட்டிய மனைவியை வைத்து காப்பாற்ற வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments