சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
159 பயணிகளை ஏற்றிச்சென்ற விமானத்தில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு.. அவசர அவசரமாக வயல்வெளியில் தரையிறக்கிய விமானிகள்

159 பயணிகளை ஏற்றிச்சென்ற விமானத்தில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு.. அவசர அவசரமாக வயல்வெளியில் தரையிறக்கிய விமானிகள்
ரஷ்யாவில் நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் பயணிகள் விமானம் ஒன்று வயல்வெளியில் தரையிறக்கப்பட்டது.
சோச்சி நகரிலிருந்து 159 பயணிகளுடன் புறப்பட்ட யூரல் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கீழே இருந்த கிராமம் ஒன்றின் வெளியே காலி வயல்வெளி இருப்பதை வானிலிருந்தபடி கவனித்த விமானிகள், விமானத்தை அங்கேயே தரையிறக்கினர்.
159 பயணிகளும், 6 சிப்பந்திகளும் அந்த கிராமத்திலேயே தங்கவைக்கப்பட்டனர். மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளால் விமான உதிரி பாகங்களை வாங்க முடியாமல் ரஷ்யா திணறிவருவதாக கூறப்படுகிறது. இதனால் விமானங்களை பழுது நீக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Comments