தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கைது..!

ஆந்திர மாநிலம் நந்தியாலாவில் இன்று காலை ஆறு மணி அளவில் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை போலீசார் கைது செய்தனர்.
அவருடைய ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் நடைபெற்று இருப்பதாக கூறி கைது செய்வதற்காக போலீசார் சென்ன்றனர்.
ஆனால் சந்திரபாபு நாயுடுவிற்கு பாதுகாப்பு கொடுத்து வரும் சிறப்பு பாதுகாப்பு படையினர் அதிகாலை ஐந்தரை மணி வரை யாரும் நெருங்க இயலாது என்று தெரிவித்து விட்டனர்.
இதனைத் தொடர்ந்து காலை ஐந்தரை மணிக்கு அவர் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஷுக்கு சென்ற போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
Comments