உதயநிதி ஸ்டாலின் பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா..?: முதலமைச்சர் ஸ்டாலின்

0 3076

உதயநிதி ஸ்டாலின் பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர், பெண்ணினத்திற்கு எதிரான சனாதனக் கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்றுதான் உதயநிதி பேசினாரே தவிர எந்த மதத்தையும், மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை என்ற சொல்லை தமிழிலோ, ஆங்கிலத்திலோ உதயநிதி எந்த இடத்திலும் சொல்லவில்லை என்று கூறியுள்ள அவர், பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் மத்திய அமைச்சர்கள் பொய்ச் செய்தியின் அடிப்படையில் உதயநிதியை கண்டித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சனாதனத்தைப் பற்றி தவறாகப் பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் பேசியதாக செய்தி வெளியாகி இருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

மணிப்பூர் பற்றியோ, சி.ஏ.ஜி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளவை குறித்தோ பிரதமரும் அமைச்சர்களும் இன்னும் வாயே திறக்கவில்லை என்றும் சனாதனத்தைப் பற்றி பேசியவுடன் அமைச்சரவையே கூடி இருக்கிறது எனறும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வுக்கு வந்திருப்பது, சனாதனத்தின் மீதான ஈடுபாடு அல்ல என்றும் இந்தியா கூட்டணிக்குள் எப்படியாவது விரிசலை ஏற்படுத்திவிட முடியாதா என்ற அரசியல் கணக்கு எனவும் முதலமைச்சர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments