செஞ்சியில் தெரு நாய் கடித்து பள்ளி மாணவர்கள் இருவர் உள்பட 10 பேர் காயம்..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தெரு நாய் கடித்து பள்ளி மாணவர்கள் இருவர் உள்பட பத்து பேர் காயமடைந்தனர்.
செஞ்சி நான்கு முனை சந்திப்பில் இருந்து காந்தி பஜார் வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களை தெருநாய் கடித்துள்ளது. காயமடைந்தவர்கள் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செஞ்சி நகரில் தெருநாய்கள் அதிகமாக உள்ளதாகவும், அவற்றுக்குத் தடுப்பூசி போட்டு அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments