போதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நேற்றிரவு போதையில் அதிவேகமாக காரை இயக்கி இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை இடித்துத் தள்ளி விபத்தை ஏற்படுத்திய நபர்களை, காரில் இருந்து இறக்கி, அங்கிருந்த சிலர், சரமாரியாகத் தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
விபத்தை ஏற்படுத்தி விட்டு தாறுமாறாக சென்ற காரை, அங்கிருந்தவர்கள் விரட்டி சென்று மடக்கியுள்ளனர்.
அப்போது காரை விட்டு வெளியேறுமாறு கூறியும், அதிலிருந்த 4 இளைஞர்களும் உயிருக்குப் பயந்து வெளியில் வரவில்லை.
இதனால், ஆத்திரமடைந்தவர்கள், கார் கதவுகளை பிடித்து, இழுத்து திறந்து, அதில் ஒரு இளைஞரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி போலீசார், இளைஞர்களை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், வளசரவாக்கத்தைச் சேர்ந்த அவர்கள் பழவேற்காடு சென்றுவிட்டு திரும்பியது தெரியவந்தது.
Comments