ஊழல் புகார்களை திசை திருப்ப சனாதனம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளர் உதயநிதி ஸ்டாலின் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

0 2134

மக்களை ஏமாற்றி திசை திருப்பவும், திமுக அரசு மீதான ஊழல் புகார்களை திசை திருப்பவும், சனாதனம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதால், அது விமர்சனப் பொருளாய் ஆகியிருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு, கண்டனம் தெரிவிக்கும் வகையில் மம்தா பானர்ஜி கருத்துத் தெரிவித்திருப்பதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

கிறிஸ்துவ மதமாக இருந்தாலும், இஸ்லாமியமாக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும் மதத்தை இழிவு படுத்துவதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments