வேறு ஒருவரை மணக்க நினைத்த இளம்பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்று குடிநீர்த் தொட்டியில் வீசிய காதலன் கைது.. !!

நீலகிரி மாவட்டம் எடக்காடு பாதகண்டி பகுதியில் இளம்பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்றதாக காதலன் கைது செய்யப்பட்டார்.
பட்டப்படிப்பு முடித்த விசித்திரா என்பவருக்கு பெற்றோர் திருமண வரன் பார்த்து வந்த நிலையில் கடந்த 1-ந் தேதி, அவரது வீட்டின் பின்புறம் இருந்த குடிநீர் தொட்டியில் இருந்து பிணமாக மீட்கபட்டார்.
சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், ஜெயசீலன் என்பவரை கைது செய்தனர். விசித்திராவை காதலித்து வந்த ஜெயசீலன், அவரது திருமண முடிவை அறிந்து தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த ஜெயசீலன் கயிறை எடுத்து விசித்ராவின் கழுத்தை நெரித்து கொலை செய்து அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் உடலை போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. ஜெயசீலனை கைது செய்த போலிசார் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments