மாற்றுத்திறனாளி தம்பதி ஆட்டோவில் தவற விட்ட நகை, செல்போனை 8 மணி நேரத்தில் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்
மாற்றுத்திறனாளி தம்பதி ஆட்டோவில் தவற விட்ட நகை, செல்போனை 8 மணி நேரத்தில் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்
சென்னையில் பார்வைக் குறைபாடு உடைய தம்பதி ஆட்டோவில் தவறவிட்ட தங்க நகைகளை 8 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
மதுரவாயலைச் சேர்ந்த மாரிசாமி-பவானி ஆகிய இருவரும் தியாகராய நகர் தங்க நகைக் கடையில் சேமிப்புத் திட்டத்தின் மூலமாக பணம் கட்டி சுமார் 5 சவரன் நகையை வாங்கியுள்ளனர். வீட்டிற்கு வந்து பார்க்கும் போது தங்க நகைகள் மற்றும் செல்போன் ஆகியவற்றை ஆட்டோவில் தவறவிட்டதை அறிந்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சிசிடிவி மூலமாக ஆட்டோவை அடையாளம் கண்ட போலீசார், அதன் ஓட்டுநரான தீனதயாளன் என்பவரை வரவழைத்து நகையை மீட்டனர். நகை ஆட்டோவில் இருப்பது தெரியாமல் தொடர்ந்து அவர் பல்வேறு இடங்களுக்கு சவாரிகள் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
Comments