காவிரி நீர் பிரச்சினை: உச்சநீதிமன்றத்தில் நாளை தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு

காவிரி நீர் பிரச்சினையில் நாளை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது.
தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு தினமும் 5 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட காவிரிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடியை காப்பாற்ற காவிரியில் 24 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு தமிழகம் கோரிக்கை விடுத்தது.
அணைகளில் குறைவான அளவில் தண்ணீர் இருப்பதாக காரணம் காட்டி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்து வருகிறது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையிடு செய்யப்படுகிறது.
Comments