அதிக விலை கொடுத்து அதிக திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களை வாங்கி கொடுக்காதீர்.. கிராம சபை கூட்டத்தில் பெற்றோருக்கு போக்குவரத்து ஆய்வாளர் கோரிக்கை.. !!

சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பிள்ளைகளுக்கு அதிக விலை கொடுத்து அதிக திறன் கொண்ட R15, FEZ போன்ற இரு சக்கர வாகனங்களை பெற்றோர்கள் வாங்கி தர வேண்டாம் என்று போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோவிந்தன் தெரிவித்தார்.
திருவொற்றியூரில் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் மற்றும் ஐந்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் தலைமையில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய போக்குவரத்து காவல் ஆய்வாளர், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 வயதிற்கு கீழ் வயதுடைய இளைஞர்கள் 60 சதவீதம் பேர் வாகன விபத்தில் உயிரிழந்திருப்பதாகவும் கூறினார்.
Comments