எல்லையில் அமைதி -சீன அதிபரிடம் மோடி வலியுறுத்தல்

0 1212
எல்லையில் அமைதி -சீன அதிபரிடம் மோடி வலியுறுத்தல்

பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நேராக பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, எல்லையில் படைகளைக் குறைத்து அமைதி நிலவினால் மட்டுமே இந்தியா-சீனா உறவு மேம்படும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக் பிரதேசத்தில் மூன்றுஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே மோதல் நீடித்து வருகிறது. இருதரப்பினரும் எல்லையில் சுமார் 60 ஆயிரம் படைவீரர்களைக் குவித்துள்ளதால் எப்போதும் அமைதியற்ற சூழல் காணப்படுகிறது. இருநாட்டு ராணுவத் தளபதிகளும் இதுவரை 19 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் நிலைமையில் சிறிது முன்னேற்றம் காணப்படுகிறது. இருப்பினும் எல்லையின் இரண்டு சமவெளிப்பிரதேசங்களில் சீனா படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் பிரிக்ஸ் மாநாட்டில் சந்தித்துக் கொண்ட பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் லடாக் நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அசல் எல்லைக் கோட்டை மதித்து நடக்க வேண்டும் என்று, சீன அதிபரிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். எல்லையில் நிலவும் அமைதியைப் பொருத்தே சீனாவுடனான இந்தியாவின் நல்லுறவு நீடிக்கும் என்பதை மோடி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது, இரு தலைவர்களும் தங்கள் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசித்து, அவரவர் ராணுவத் தளபதிகளிடம் படைக்குறைப்புக்கு உத்தரவிட, ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments