தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களிடம் நகைகளை திருடிய கும்பல் கைது..!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களிடம் நகைகளை திருடிய கும்பலை கைது செய்த தனிப்படை போலீசார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் மற்றும் 58 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக பேசிய திருச்சி எஸ்.பி அருண்குமார், தங்கள் மாவட்டத்தில் ரவுடியிசம், கஞ்சா விற்பனை போன்றவற்றை கட்டுப்படுத்துவது தான் தமது நோக்கம் என்றார்.
பொதுமக்களின் சேவைக்காக தமது தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த தொலைபேசி எண்ணில் வரும் புகார்களை உடனடியாக பரிசீலனை செய்து உண்மை தன்மை இருக்கும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Comments