ஹவாயில் காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

0 880

ஹவாயில் காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது.

ஹவாயின் மவுய் தீவில் பரவிய காட்டுத் தீயால் கடலோர நகரமான லாஹைனா உருக்குலைந்தது. சுமார் 2,200 கட்டமைப்புகள் எரிந்து சேதமடைந்த நிலையில், 2,100 ஏக்கர் காடுகள் தீயில் கருகின. எரிந்து போன கட்டமைப்புகளில் இருந்து சடலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதால், இறப்புகள் மேலும் அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், மவுய் தீவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஹவாயில் உள்ள மற்ற தீவுகளில் வசிக்கும் மக்கள், நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments