வெப்ப அலையால் பொலிவியாவில் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீ... விமான ஓடுபாதை புகை மண்டலமாக காட்சி

பொலிவியாவில் விமான நிலையம் அருகே ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
அங்கு கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், சாண்டா குரூஸ் மாகாணத்தில் அடிக்கடி காட்டுத்தீக்கள் ஏற்பட்டு வருகின்றன.
விமான நிலையம் அருகே கொழுந்துவிட்டு எரியும் நெருப்பால், ஓடுபாதை புகை மண்டலமாகி, விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
சூறைக்காற்றால் வேகமாகப் பரவிவரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
Comments