சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
கேரளாவில் மனைவியை கம்பியால் அடித்து கொன்று காவல் நிலையத்தில் சரணடைந்த கணவர் ....

கேரள மாநிலம் திருச்சூர் அருகே மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கம்பியால் அடித்து கொன்ற கணவர், காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சேரூர் பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்துவந்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன்புதான் ஊருக்கு வந்துள்ளார்.
மனைவி சுலி வேறு ஒருவருடன் முறை தவறிய உறவில் இருப்பதாக சந்தேகித்த உன்னிகிருஷ்ணன் 2 நாட்களாக சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சுலியை கம்பியால் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது.
Comments